Home
Mobile

லோக்கல் பட்ஜெட்.. 50MP கேமரா.. HD+ டிஸ்பிளே.. 8GB ரேம்.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் எச்டி பிளஸ் டிஸ்பிளே, டைமன்சிட்டி 700 சிப்செட், 8 ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ஓப்போ ஏ59 5ஜி (Oppo A59 5G) போன் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஓப்போ ஏ59 5ஜி அம்சங்கள் (Oppo A59 5G Specification): இந்த ஓப்போ போன் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

லோக்கல் பட்ஜெட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த ஓப்போ ஏ59 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் காலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி (MediaTek Dimensity 700 SoC) சிப்செட் மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற கிராபிக்ஸ் கார்டாகும். இந்த ஓப்போ மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வர இருக்கிறது. அதோடு விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படலாம். இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் பேட்டரி செட்டப் கூட பக்காவாகவே இருக்கிறது.

இதில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இது மலிவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

மேற்கூறிய அம்சங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மார்கெட் வட்டாரங்களில் கசிந்து அம்சங்களாகும். அதேபோல இந்த ஓப்போ போனின் விலை குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், இதே அம்சங்களுடன் சமீபத்தில் வெளியான ஓப்போ ஏ2 எக்ஸ் போனின் விலையை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,575ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,005ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போனும் ரூ.13,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த சூழலில் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்றுள்ளது. ஆகவே, இந்த போன் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பெஸ்ட் ரேம் மற்றும் மெமரி சப்போர்ட், பக்காவான 5ஜி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி போன்ற அம்சங்களுடன் மலிவான விலையில் ஓப்போ பிராண்டில் போன் வேண்டும் என்றால், இந்த ஓப்போ ஏ59 5ஜி போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A59 5G 8GB RAM, 5MP Camera, Dimensity 700 Surfaces BIS Specification, Price Launch Timeline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X