Home
Mobile

இவ்ளோ கம்மியா? குவியும் ஆர்டர்கள்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 12 ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் பிரத்யேக டிசைனில் ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ஏ58 (OPPO A58) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐடெல், ரெட்மி, இன்பினிக்ஸ், போக்கோ போன்ற நிறுவனங்களை தொடர்ந்து, ஓப்போ நிறுவனமும் பட்ஜெட் விலை போன்களை களமிறக்க தொடங்கிவிட்டது. அதே வேளையில், பட்ஜெட் விலை போன்களுக்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி காரணமாக நல்ல நல்ல அம்சங்களை கம்மியான விலைக்கு கொடுத்து வருகின்றன.

குவியும் ஆர்டர்கள்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அந்த வரிசையில், ரூ.15,000 பட்ஜெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ஏ58 போன் இன்று (ஆகஸட் 8) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் உடனடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், நோ - காஸ்ட் இஎம்ஐ போன்ற பிரத்யேக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போனின் முழு அம்சங்கள், சலுகை விவரங்கள் பின்வருமாறு.

ஓப்போ ஏ58 அம்சங்கள் (OPPO A58 Specifications): இந்த ஓப்போன் போன் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 680 நிட் பீக் பிரைட்னஸ் வருகிறது. டிசிஐ - பி3 (DCI-P3) கலர் காமட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு (Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 6 ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் போர்ட்டுடன் மைக்ரோ எஸ்டி கார்டு போர்ட் வருகிறது.

இந்த ஓப்போ ஏ58 போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த போன் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

மேலும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ளூடூத் 5.3, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப் - சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன, இந்த போன் பேட்டரி உடன் சேர்ந்து, 192 கிராம் எடைக் கொண்டுள்ளது.

க்ளோவிங் பிளாக் (Glowing Black), டாஸ்லிங் கிரீன் (Dazzling Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல இஎம்ஐயில் வாங்கினால், ரூ.1,250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதோடு ரூ.500 மதிப்பிலான கேஸ் பேக் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.14,450 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A58 with 12GB RAM, 33W SuperVOOC Charging 5000mAh Battery Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X