5G ரேசில் இணைந்த ஒப்போ: சத்தமின்றி களமிறங்கும் புதிய போன்: என்னென்ன அம்சங்கள்?
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் வரும் நவம்பர் 11-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ58 5ஜி
அதேபோல் இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த Oppo A58 5Gஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி பிரைமரி சென்சார்
ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி
ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனில் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720 x 1612 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dimensity 700 சிப்செட்
புதிய ஒப்போ ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த ஒப்போ போன். குறிப்பாகஇந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4880 எம்ஏஎச் பேட்டரி
4880 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ58 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன்.

128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுஉள்ளது.

குறிப்பாக வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ போன் மேலும் பிளாக், பர்பில், ப்ளூ நிறங்களில் இந்த ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் ரூ.16,000-விலையில்அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications