Home
Mobile

6.72-இன்ச் டிஸ்பிளே.. சூப்பர்வூக் சார்ஜிங்.. நாளை அறிமுகமாகும் புதிய OPPO போனில் ஒரே ஒரு குறைதான்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ58 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய செய்ய உள்ளது. அதாவது இந்த புத்தம் புதிய ஒப்போ போன் நாளை (ஆகஸ்ட் 8) அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த ஒப்போ ஏ58 விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ ஏ58 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இணையதளத்தில் வெளியான இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாளை அறிமுகமாகும் புதிய OPPO போனில் ஒரே ஒரு குறைதான்?

ஒப்போ ஏ58 ஸ்மாரட்போன் ஆனது 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ58 போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ஏ58 ஸ்மாரட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது.. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும். பின்பு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஆதரவுடன் இந்த ஒப்போ ஏ58 ஸ்மாரட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை அறிமுகமாகும் புதிய OPPO போனில் ஒரே ஒரு குறைதான்?

குறிப்பாக ஒப்போ ஏ58 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த ஒப்போ ஏ58 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு குறைதான். அதாவது இதில் 5ஜி ஆதரவு இல்லை. குறிப்பாக 4ஜி ஆதரவுடன் இந்த புதிய ஒப்போ போன் அறிமுகமாகும். தற்போது 5ஜி போன்களை தான் பட்ஜெட் விலையில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஜிபிஎஸ்,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் ரூ.14,999-விலையில் இந்த ஒப்போ ஏ58 (Oppo A58 4G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A58 4G Smartphone India Launch Date Price and Specifications: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X