அம்மாடியோவ்.! இது அது ல.! வரவிருக்கும் புதிய OnePlus Nord போன் Oppo A57 போனா? குழப்பம் வேண்டாம் இதான் விஷயம்..

By
|

ஒன்பிளஸ் இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் அதன் மலிவு விலை 'நோர்ட்' சாதனங்களின் போர்ட்ஃபோலியோவை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. புதிய முன்னேற்றங்களின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் மிக விரைவில் ஒரு புதிய Nord சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. நாம் பேசும், இந்த வரவிருக்கும் Nord சாதனம் மறுபெயரிடப்பட்ட Oppo A57 ஆக இருக்கலாம் என்று கூறப்படுவதே சிலரைக் குழப்பமடைய வைத்துள்ளது. இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

புதிய Oppo A57 ஸ்மார்ட் போன் சாதனம்

புதிய Oppo A57 ஸ்மார்ட் போன் சாதனம்

ஒப்போ நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய Oppo A57 ஸ்மார்ட் போன் சாதனம், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஏற்கனவே தாய்லாந்து சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் சாதனம் மறுபெயரிடப்பட்ட Oppo A57 ஆக இருக்கலாம் என்ற செய்தி ஒன்பிளஸ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகும் சாதனம் ஒப்போ சாதனமா அல்லது ஒன்பிளஸ் சாதனமா என்பதே இப்போது குழப்பமாக இருக்கிறது.

வெறும் 1 மணி நேரத்தில் 270,000 யூனிட் விற்பனை.. Redmi Note 11T Proவில் அப்படி என்ன இருக்கிறது?வெறும் 1 மணி நேரத்தில் 270,000 யூனிட் விற்பனை.. Redmi Note 11T Proவில் அப்படி என்ன இருக்கிறது?

FFC பட்டியல் வெளிப்படுத்திய தகவல் என்ன சொல்கிறது?

FFC பட்டியல் வெளிப்படுத்திய தகவல் என்ன சொல்கிறது?

Gizmochina அறிக்கையின்படி, புதிய OnePlus ஸ்மார்ட்போன் FFC அதிகாரத்தில் காணப்பட்டுள்ளது. இந்த சாதனம் பற்றிய சில முக்கிய தகவல்களை FFC பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது. FCC ஆவணங்களின்படி, வரவிருக்கும் OnePlus ஸ்மார்ட்போன் CPH2469 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இது 4G LTE சாதனம் என்பது அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Oppo நிறுவனம், OnePlus ஐ அதன் பிராண்டின் கீழ் Oppo சாதனத்தைச் சந்தைப்படுத்த அனுமதிக்கிறது என்பதை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

OnePlus இன் அடுத்த புது சாதனத்தின் மாடல்

OnePlus இன் அடுத்த புது சாதனத்தின் மாடல்

OnePlus எடுத்துக்கொண்டிருக்கும் Oppo சாதனம் CPH2387 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. அறியாதவர்களுக்கு, மாடல் எண் CPH2387 என்பது Oppo A57 ஸ்மார்ட் போனுக்கானது என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. இது சமீபத்தில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இந்தியாவிற்கும் மிக விரைவில் வரப்போகிறது. இதன்படி, மறுபெயரிடப்பட்ட Oppo A57 ஆக இருக்கும் OnePlus ஃபோன் நார்ட் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் மற்றும் மலிவு விலையில் வரக்கூடிய சாதனமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

Oppo சாதனத்தின் அச்சு அசல் நகலா வரவிருக்கும் OnePlus ஸ்மார்ட்போன்

Oppo சாதனத்தின் அச்சு அசல் நகலா வரவிருக்கும் OnePlus ஸ்மார்ட்போன்

இதற்கு மேல், இந்த ஸ்மார்ட் போன்கள் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், OnePlus சாதனம் Oppo சாதனத்தின் அச்சு அசல், சரியான நகலாக இருக்காது என்பது மட்டும் பெரிதும் நம்பப்படுகிறது. காரணம், ஒன்பிளஸ் நிச்சயமாக ஸ்மார்ட்போனை அதன் பிராண்டிற்கு ஏற்ற வகையில் சொந்தமாக மாற்றும் சில அம்சங்களுடன் அதைக் குறைந்த அளவிலாவது மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், Oppo ஸ்மார்ட்போன்களில் உள்ள ColorOS-ஐ விட வித்தியாசமான உணர்வைத் தரும் OxygenOS இதில் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

வன்பொருள் பக்கத்தில் எவ்வளவு ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்?

வன்பொருள் பக்கத்தில் எவ்வளவு ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்?

ஆனால், வன்பொருள் பக்கத்தில், OnePlus சாதனம் Oppo A57 போன்ற அதே விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ஏற்கனவே தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டதால், இதன் டிஸ்பிளே, பிராசஸர், கேமரா மற்றும் பேட்டரி ஆகியவற்றின் அடிப்படையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த தயாரிப்பில் உள்ள குறிப்பிட்ட OnePlus ஸ்மார்ட்போன், நிறுவனம் இதுவரை அறிமுகப்படுத்திய மிகவும் மலிவான சாதனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A57 Could be Launched as Rebranded OnePlus Nord Smartphone Soon Know The Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X