அட்டகாசமான ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த ஒப்போ ஏ57 5ஜி மாடல். விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,612 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 90 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் Mali G57 MC2 GPU ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ColorOS 12.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன். இதுதவிர கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன்.

புதிய ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.17,999), இதன் 6ஜிபி ரேம் வேரியண்டின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications