Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

128ஜிபி மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.18,800). மேலும் கிளவுட் ஸ்மோக் ப்ளூ, சாஃப்ட் ஃபாக் பிளாக் மற்றும் விண்ட் சைம் பர்பிள் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ56 5ஜி
ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ56 5ஜி

ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன்.

 புதிய ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியுடன் Mali-G57 MC2 GPU ஆதரவும் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும். அதேசமயம் கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட்வேகமாக செயல்படும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் கலர்ஓஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி உள்ளது. பின்பு விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலுத்தியுள்ளது

இந்த ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன்.

சிம் (நானோ) ஸ்லாட்டுகள், யுஎஸ்பி

இரட்டை சிம் (நானோ) ஸ்லாட்டுகள், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1, வைஃபை 5, 3.5mm ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo A56 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X