ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.!
ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 4000 எம்ஏஎச் பேட்டரி, அசத்தலான கேமராக்கள்
என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை JPY 32,800 (இந்திய மதிப்பில் ரூ.21,200)-ஆகஉள்ளது. பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்ஜப்பானில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி எல்டிபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஒப்போ ஏ55எஸ் 5ஜி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் வேகமாக இருக்கும் என்றே கூறலாம். குறிப்பாக ஒப்போ ஏ55எஸ் 5ஜி சாதனம் ஆனது கலர்ஒஎஸ் 11- சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 14எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கேமரா அம்சங்களும் உள்ளன.

இந்த புதிய ஒப்போ ஏ55எஸ் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரோஸ்கோப் சென்சார், ஆப்டிகல் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் எனப் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 178 கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி மாடல்.

5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ55எஸ் 5ஜி மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications