ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு- இது டபுள் ஓகே!

|

ஒப்போ நிறுவனம் பட்ஜெட், ப்ரீமியம் என பல்வேறு விலைப்பிரிவுகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒப்போ ஏ55 அதன் சமீபத்திய சாதனங்களில் பட்டியலில் இணைந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,49 ஆக இருக்கிறது. இந்த சாதனம் அக்டோபர் 3 முதல் விற்பனைக்கு வரும். அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,490 ஆக இருக்கிறது. இந்த சாதனம் அக்டோபர் 11 முதல் விற்பனைக்கு வரும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

புதிய ஏ55 சாதனம் பட்ஜெட் சாதனங்களில் இதுவரை இல்லாத அம்சங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், பின்புறத்தில் ட்ரூ 50 எம்பி ஏஐ கேமரா மற்றும் ஏஐ அழகுப்படுத்தல் வசதியுடன் 16 எம்பி முன்புற கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.

அதேபோல் இதில் பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. அதோடு இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் கடுமையான போட்டியை உருவாக்க இருக்கிறது. இது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விருப்பங்கள் கொண்ட கலர் ஓஎஸ் 11.1 உடன் வருகிறது. இது சிறந்த சாதனத்துக்கான உகந்த செயல்திறனை கொண்டுள்ளது.

இந்த சாதனம் பிற சாதனங்களில் இருந்து எந்தவகையில் வேறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

ஒப்போ ஏ55: ஒப்போவின் ஸ்டைலான அறிக்கை

ஒப்போ ஏ55: ஒப்போ ஒரு ஸ்டைலான அறிக்கை மூலம் அதன் ஒப்போ ஏ55 சாதனத்தின் தனித்துவ நிறம் மற்றும் வடிவமைப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது ரெயிந்போ ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. இது மிகவும் நவநாகரீக மாறுபட்ட வண்ண அமைப்பு ஆகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தனிப்பட்ட வண்ணமான வானவில் நிறம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது வித்தியாசமான சாயலை பிரதிபலிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மென்மையானதாக இருக்கிறது. இது 8.40 மிமீ மற்றும் 192 கிராம் எடையுடன் வருகிறது. இதை நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் அசௌகரியமான உணர்வை அளிக்கவில்லை. இது 3டி வளைந்த வடிவமைப்பு வசதியோடு வருகிறது.

இதன் விலை பிரிவில் கிடைக்கும் சாதனங்களோடு ஒப்பிடுகையில் இதன் அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். இதில் ஒப்போ ஏ55-க்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புற கார்ட் 3டி பேனல்களால் ஆனது, இதுல உலோகத்தால் பதிக்கப்பட்ட அலுமினியம் அலாய் உடன் வருகிறது. இது தொலைபேசி மடங்குவதை தடுக்கிறது.

இது செங்குத்தாக பொருத்தப்பட்ட கேமரா வடிவமைப்போடு வருகிறது. இதில் இருக்கும் சிடி-வகை ரிங் அதன் அழகை அதிகரிக்கிறது. கேமராக்கள் வெளிப்படையான விண்டோஸ்-க்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளன. இது ஸ்மார்ட்போனின் அழகை அதிகரிக்க ஒளியை திசை திருப்ப உதவுகிறது. இது நிச்சயமாக இந்த விலை பிரிவில் கிடைக்கும் சிறந்த தோற்றமுடைய சாதனங்களில் ஒன்றாகும்.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

ஒப்போ ஏ55 கேமராக்கள் வடிவமைப்பு

ஒப்போ ஏ55 முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதன் பின்புறத்தில் ட்ரூ லென்ஸ், 2 எம்பி பொக்கே லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. இதில் ட்ரூ 50 எம்பி பிரதான கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ55 சாதனத்தில் ஒப்போவின் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கேமராவை 12.5 எம்பி லென்ஸுக்கு மாற்றம் செய்வதற்கான தேர்வும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த வெளிச்சத்திலும் அதிக நுட்பமான காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் அதி உயர் திறன் கொண்ட காட்சிகளை தேடுகிறீர்கள் என்றால் இதில் இருக்கும் 50 எம்பி கேமரா லென்ஸ் பெரிதளவு பயன்படுகிறது. நைட் மோட் போன்ற அம்சங்களும் இதில் இருக்கிறது. இரவு காட்சிகளில் படமெடுக்கையில் சிறந்தவையாக இருக்கிறது. நைட் மோட் அம்சத்தில் நகர்ப்புற காட்சிகளை நேரலையாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

செல்பி என வரும்போது, ஒப்போ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செல்பி அம்சங்களை வழங்குகிறது. ஒப்போ ஏ55 சாதனத்தின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஏஐ அழகுபடுத்தும் அம்சத்துடன் துல்லியமான செல்பி காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது. 360 டிகிரி பில் லைட் அம்சம் மங்கலான வெளிச்சத்தில் கூட மிகத் தெளிவான காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

ஒப்போ ஏ55: சக்திவாய்ந்த பேட்டரியுடன் நாள் முழுவதும் பயன்பாட்டை வழங்குகிறது

ஒப்போ ஏ55 முக்கிய அம்சம் அதன் சக்தி வாய்ந்த பேட்டரி ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது மிகவும் மெல்லிய வடிவில் இருந்தாலும் அதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இது சார்ஜிங் நேரத்தை வெகுவாக குறைக்கிறது. அதேபோல் ஒற்றை சார்ஜிங்கில் நீண்ட நேரம் நீடிக்கும் வகையில் இருக்கும். தொலைபேசியை நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் இது வசிதியான உணர்வை கொடுக்கும். கூடுதலாக இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வேகமாக போனை சார்ஜ் செய்ய பயன்படுகிறது.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

மேலும் இதில் சூப்பர் நைட் டைம் காத்திருப்பு அம்சம், சூப்பர் பவர் சேவிங் மோட், உகந்த நைட் சார்ஜிங், ஸ்மார்ட் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் ஷார்ட் சர்க்யூட் பாதுகாப்பு போன்ற பிற ஸ்மார்ட் அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. ஒப்போ ஏ 55 சாதனத்தின் உகந்த பேட்டரி அம்சம் விளையாட்டுக்கு தடையில்லா அனுபவத்தை வழங்குகிறது.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனின் அனுபவம்

ஒப்போ ஏ55 பல சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைபாடற்ற அனுபவத்தை அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும் அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டை பயன்படுத்தி 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது இரட்டை சிம் ஆதரவு மற்றும் நினைவக விரிவாக்க திறன்களுடன் வருகிறது. அதேபோல் ஒப்போ ஏ55 சாதனம் தங்களுக்கு பிடித்த இசை, வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்ள போதுமான உள்ளடக்கத்தை உறுதி செய்கிறது.

ஸ்மார்ட்போனில் சிறந்த செயல்திறனை உறுதி செய்யும் மென்பொருள் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதில் கலர் ஓஎஸ் 11.1 ஓப்போ கலர் ஓஎஸ் 11.1 அனைத்தையும் திறமையாகவும் மென்மையாகவும் பயன்படுத்த அனுமதிக்கிறது. சிஸ்டம் பூஸ்டர் அம்சங்கள் இதை தாமதமின்றி வேகமாக பயன்படுத்த உதவுகிறது.

அதேபோல் கேமிங் மற்றும் வீடியோ பார்ப்பதற்கு கலர் ஓஎஸ் 11.1 சிறந்த பொழுதுபோக்கு அம்சத்தை வழங்குகிறது. சிறந்த அனுபவத்தை வழங்க தேவையான முழு உணர்வை இது வழங்குகிறது. இந்த சாதனம் சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

ஒப்போ ஏ55: பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் கேமரா, கண்கவர் வடிவமைப்பு!

ஒப்போ ஏ55: ஆல் ரவுண்டர் ஸ்மார்ட்போன்

Oppo A55 தங்கள் அனைத்து தேவைகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் இதன் விலை பிரிவில் கிடைக்கும் சிறந்தவைகளில் ஒன்றாகும். சிறந்த செயல்திறன் கொண்ட சாதனம் தேடுபரவாக நீங்கள் இருந்தால் ஒப்போ ஏ55 உங்களுக்கு சிறந்த தேர்வாகும்.

ஆஃப்லைன் சலுகைகள்

  • ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஆர்பிஎல் பேங்க், கோடக் பேங்க், ஃபெடரல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, சிறிய நிதி வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் கடன் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கேஷ்பேக் மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்களுடன் வருகிறது.
  • பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி நிதி சேவைகள், டிவிஎஸ் கிரெடிட், எச்டிஎஃப்சி பேங்க், கோடக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹவுசிங் லோன், மஹிந்திரா நிதி ஆகியவற்றில் இருந்து ஈசி இஎம்ஐ நிதி வசதி கிடைக்கிறது.

ஆன்லைன் சலுகைகள்:

  • எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் இஎம்ஐ உட்பட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ.3000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.
  • பிரைம் உறுப்பினர்களுக்கு 6 மாதங்கள் டிஸ்ப்ளே மாற்றுதல், 3 மாதங்கள் இலவச அமேசான் பிரைம் சந்தா ஆகியவற்றுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது.

இ-ஸ்டோர் அணுகல்

  • கோடக், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஆக்சிஸ் வங்கி பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி.
  • 3 மாதங்களுக்கு இஎம்ஐ இல்லை.
Most Read Articles
Best Mobiles in India

English summary
OPPO A55: Powerful Cameras packed in a stunning design at a brilliant price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X