ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate, 480 nits பிரைட்நஸ் அம்சம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப் உடன் SA/NSA டூயல்-மோட் 5ஜி நெட்வொர்க் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ColorOS 11.1 ஒஎஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Brisk Blue மற்றும் Rhythm Black போன்ற நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சாரஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5 ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.18,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications