50எம்பி ரியர் கேமராவுடன் விரைவில் வெளிவரும் ஒப்போ ஏ55 4ஜி ஸ்மார்ட்போன்.!
ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஒப்போcநிறுவனம் விரைவில் ஒப்போ ஏ55 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான
அம்சங்களுடன் வெளிவரும்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒப்போ ஏ55 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒப்போ ஏ55 4ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோக்களுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இதற்குமுன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே விரைவாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். பின்பு கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் V5.2, வைஃபை 802.11 ஏசி, 5 ஜி ஆதரவு,
என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் விரைவில் வெளிவரும் ஒப்போ ஏ55 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல ஒப்போ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications