50எம்பி ரியர் கேமராவுடன் ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ ஏ54எஸ்
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 229.99 (இந்திய மதிப்பில் ரூ.20,000)ஆக உள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் பிளாக் மற்றும் பேர்ல் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்போது இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதி உள்ளது. மேலும் கலர்ஓஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் கேமராக்கள் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும்.

ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

புளூடூத் வி5,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒப்போ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications