5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்தோனேசியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்க முடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன். மேலும் கிரிஸ்டல் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ நிறங்களில் இந்த ஒப்போ ஏ54 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.13,600-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 2400 x 1080 பிக்சல்கள் திரை, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தோடு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட்ஸ் விஓஓசி 4.0 வேகமான சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனானது 662 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.
ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல்கள் மோனோக்ரோமேடிக் சென்சார்கள் உள்ளது. செல்பி கேமராவிற்கென 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி பாதுகாப்பு அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இணைப்பு அம்ச ஆதரவோடு கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயக்கப்படுகிறது. வைபை 802.11, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியை இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நேவி ப்ளூ மற்றும் க்ளாசிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக ஒப்போ ஏ73 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662, பின்புறத்தில் 16 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா, 2 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது. இதன் செல்பி வசதிக்கென 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி சேமிப்பு வசதியும் இதில் உள்ளது. 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications