ஒப்போ ரசிகர்களுக்கு லக்கு தான்! கம்மி விலையில் புதிய Oppo A54 அறிமுகம்.. நாளை முதல் விற்பனை..

|

ஒப்போ நிறுவனம் இன்று புதிய ஒப்போ ஏ 54 (Oppo A54) என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Oppo A54 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சாதனம் மிட் ரேஞ் பட்ஜெட் விலையில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன். 5,000 எம்ஏஎச் சக்தி கொண்ட பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனத்தின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது வெறும் ரூ. 13,490 விலையில் கிடைக்கிறது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன், தரமானமீடியாடெக் ஹீலியோ P35 சிப்செட் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற இரண்டு வேரியண்ட் மாடல்களின் விலை என்ன?

மற்ற இரண்டு வேரியண்ட் மாடல்களின் விலை என்ன?

இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 14,490 விலையிலும், இதன் ஹை-எண்ட் மாடலான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 15,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கிரிஸ்டல் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ என இரண்டு வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக நாளை (ஏப்ரல் 20) முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..

ஒப்போ A54 சிறப்பம்சம்

ஒப்போ A54 சிறப்பம்சம்

புதிய ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

நீடித்து நிலைக்கும் 5,000 mah பேட்டரி

நீடித்து நிலைக்கும் 5,000 mah பேட்டரி

புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A54 with 5000mAh battery launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X