புதிய Oppo A54 போனின் முதல் விற்பனை: விலை இவ்வளவு குறைவா? உடனே ஆர்டர் போடலாம் போலயே..
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ 54 (Oppo A54) என்ற ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய Oppo A54 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்குக் கிடைக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ P35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சாதனம் மிட் ரேஞ் பட்ஜெட் விலையில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன். 5,000 எம்ஏஎச் சக்தி கொண்ட பேட்டரியுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை, விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

நம்ப முடியாத விலையில் ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை
ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் நம்ப முடியாத பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் மூலமாக மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய சாதனத்தின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது வெறும் ரூ. 13,490 விலையில் கிடைக்கிறது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன், தரமான மீடியாடெக் ஹீலியோ P35 சிப்செட் உடன் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் ஸ்டோரேஜ் மாடலுக்கு கொஞ்சம் கூடுதல் காசு
இது போக, ஒப்போ நிறுவனம் இன்னும் கூடுதலாக ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போனை இரண்டு மாடல்களில் வழங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 14,490 விலையிலும், இதன் ஹை-எண்ட் மாடலான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் ரூ. 15,990 விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளூ என இரண்டு வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

தரமான டிஸ்பிளே.. மிரட்டலான சிப்செட்
புதிய ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

குவாலிட்டியான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000 mah பேட்டரி
புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களைப் பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications