ஒப்போ ஏ54 5ஜி அறிமுகம்: 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு!

|

ஒப்போ நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் ஒப்போ ஏ54 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் சிப்செட் இயக்கம் மற்றும் 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்துள்ளது.

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ 4ஜி எல்டிஇ எண்ணோடு ஒப்பிடும்போது இது சற்று மாறுபட்ட விவரக்குறிப்புகளோடு வருகிறது. ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட் உடன் வருகிறது.

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி ரூ.19,500 ஆக இருக்கிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பர்ப்பிள் மற்றும் ஃப்ளூயிட் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. அதேபோல் பிற சந்தைகளில் ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

ஒப்போ ஏ54 5ஜி விவரக்குறிப்புகள்

ஒப்போ ஏ54 5ஜி விவரக்குறிப்புகள்

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தோடு வருகிறது. அதேபோல் 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. மேலும் இதில் அட்ரினோ 619 ஜிபீயூ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

அதேபோல் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதியோடு வருகிறது.

ஒப்போ ஏ54 4ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ54 4ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ54 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம், 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்க முடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A54 5G Smartphone Launched With 90 Hz Display, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X