மிகவும் மலிவான விலையில் புதிய OPPO A53s 5G ஸ்மார்ட்போன்.. விலையே இவ்வளவு தானா?
இந்தியாவில் இப்போது மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன் என்று புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் மிகவும் மலிவான புதிய 5ஜி ஸ்மார்ட்போன் என்று ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ 53 எஸ் 5ஜி (OPPO A53s 5G) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். மலிவு வலையில் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு புது ஸ்மார்ட்போன் வேண்டும் என்பவர்கள் இந்த பதிவை மிஸ் செய்ய வேண்டாம்.

OPPO A53s 5G மிகவும் மலிவு விலை 5 ஜி ஸ்மார்ட்போன்
இந்தியாவில் கிடைக்கும் பிராண்டிலிருந்து மிகவும் மலிவு விலை 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல் என்ற பெயரில் OPPO A53s 5G மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். ஒப்போ A53s 5G ஸ்மார்ட்போன் ஒப்போ A74 5G என்ற மாடலுக்கு மத்தியில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இந்தியாவில் ஒப்போ A74 5G அறிமுகம் செய்யப்பட்டது.

OPPO A53s 5G எப்போது விற்பனைக்கு கிடைக்கும்
ஒப்போ A53s 5G ஸ்மார்ட்போனின் விலை மலிவாக இருப்பதினால் இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Realme 8 5G ஸ்மார்ட்போனுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த புதிய Realme 8 5G ஸ்மார்ட்போன் மாடலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் OPPO A53s 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

OPPO A53s 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?
புதிய OPPO A53s 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட பேஸ் மாடலின் விலை இந்தியாவில் வெறும் ரூ. 14,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், OPPO A53s 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 16,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் விற்பனையின் ஒரு பகுதியாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மே 2 ஆம் தேதி விற்பனை
OPPO A53s 5G இந்தியாவில் மே 2 ஆம் தேதி பிளிப்கார்ட்டில் இருந்து பிரத்தியேகமாக மதியம் 12:00 மணிக்கு விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஒப்போ அறிவித்துள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ஸ்மார்ட்போனின் மீது ரூ. 1,250 வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மூலம் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஸ்மார்ட்போன் மீது கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியும் கிடைக்கிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

OPPO A53s 5G சிறப்பம்சம்
புதிய OPPO A53s 5G ஆனது ஒரு நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய HD பிளஸ் தெளிவுத்திறனுடன் செயல்படும் 6.5 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிராண்டின் கூற்றுப்படி, இந்த டிஸ்பிளே 480 நைட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக, சாதனம் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. OPPO A53s 5G சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. OPPO A53s 5G இந்தியாவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது.

ட்ரிபிள் கேமரா அமைப்பு
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் கலர்ஓஎஸ் 11.1 உடன் இயங்குதளத்தில் இயங்குகிறது. இமேஜிங் மற்றும் கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய OPPO A53s 5G ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 13 எம்.பி பிரைமரி கேமராவுடன், 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கும், வீடியோ கால்லிங் அழைப்புகளுக்குச் சேர்த்த நிறுவனம் 8 எம்.பி கொண்ட கேமராவைப் வழங்கியுள்ளது.

5,000mAh பேட்டரி
முன்பக்கமும், பின்புறத்தில் உள்ள முதன்மை கேமராவும், முழு எச்டி வீடியோக்களை வினாடிக்கு 30 பிரேம்களில் பதிவு செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. முன்பு குறிப்பிட்டபடி, சாதனம் 5 ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. இது டூயல் சிம் கார்டு விருப்பத்துடன் டூயல் பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத் v 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications