சத்தமின்றி ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனத்தின ஒப்போ ஏ53 மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பை முதலில் மும்பையை சேர்ந்த retailer mahesh telecom தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ53
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990-க்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 சாதனத்தின் முந்தைய விலை ரூ.15,490-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2500 விலை குறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகாப் பார்ப்போம்.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட்
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியோடும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகமாகியுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

13எம்பி பிரைமரி சென்சார்
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட்சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications