Home
Mobile

ரூ.15,000-க்கு கீழ் இன்று அறிமுகமாகும் ஒப்போ ஏ53- அட்டகாச அம்சங்கள் இருக்கு!

ஒப்போ ஏ 53 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்தியாவில் இன்று அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூ.15,000-க்கு கீழ் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒப்போ ஏ 53 2020 மாடல்

ஒப்போ ஏ 53 2020 மாடல்

ஒப்போ ஏ 53 2020 மாடல் இன்று இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் சமீபத்திய நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஒப்போ ஏ 53 அறிமுகமானது டிஜிட்டல் நிகழ்வு மூலம் நடைபெற உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12:30 மணிக்கு யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ 53 வெளியீட்டு நிகழ்வு

ஒப்போ ஏ 53 வெளியீட்டு நிகழ்வு

ஒப்போ ஏ 53 விலை இந்தியாவில் ரூ. 15,000 என்ற அடிப்படையிலோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கலாம் என தெரிகிறது. ஒப்போ ஏ 53 இந்தோனேசியாவில் ஐடிஆர் 2,499,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இதன் விலை தோராயமாக ரூ.ரூ .12,700 என நிர்ணயிக்கப்படலாம். ஒப்போ ஏ53 இந்தோனேஷியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 சேமிப்பு வசதி என்ற ஒரே வேரியண்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவில் அறிமுகம்

இந்தோனேசியாவில் அறிமுகம்

சமீபத்தில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் வண்பொருள் வடிவமைப்புடன் வெளிவந்தது.

6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

13எம்பி பிரைமரி சென்சார் கேமரா

13எம்பி பிரைமரி சென்சார் கேமரா

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்திய விலை மதிப்பு

இந்திய விலை மதிப்பு

4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.12,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A53 Launching in India on Today at Under Rs.15000, Triple Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X