ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்! என்ன விலை? என்னென்ன சிறப்பம்சங்கள்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் மற்றும் வண்பொருள் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்
மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என
பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட்
சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.12,700-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications