ரூ.12,990-க்கு அறிமுகமான ஒப்போ ஏ53: 6ஜிபி ரேம், 16 எம்பி செல்பி கேமரா அம்சங்களோடு!
ஒப்போ ஏ 53 மூன்று பின்புற கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15,000 விலை பிரிவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.12,990 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.15,490 என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் ப்ளாக், ஃபேரி வைட் மற்றும் பேன்சி ப்ளூ நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்தோனேசியாவில் அறிமுகம்
சமீபத்தில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம், 6 ஜிபி ரேம்
இந்த ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியோடும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகமாகியுள்ளது. மேலும் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

16எம்பி செல்பீ கேமரா
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கைரேகை சென்சார் வசதி
4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications