அட்டகாசமான ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்டபோன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் வரும் ஜூன் 17 -ம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்கல்திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, மேலும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைக்
கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 610ஜிபியு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பிமேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராஆதரவுடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிஇவற்றுள் உள்ளது, எனவேசார்ஜ் பற்றிய கவலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ்/க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட
பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் 162கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.17,500-ஆகஉள்ளது.


Click it and Unblock the Notifications