Home
Mobile

பின்றானே இவன்.. ரூ.15,540 பட்ஜெட்ல 50MP கேமரா.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை வேறு மாடல்களை வாங்கவிடமால் கட்டிப் போடும்படியான பட்ஜெட்டில் IP66 + IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஏ5 (OPPO A5) போன் வெளியாகி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ஓப்போ எப்29 (OPPO F29) மாடலாக வெளியாக இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த ஓப்போவின் முழு விவரங்கள் இதோ.

ஓப்போ ஏ5 அம்சங்கள் (OPPO A5 Specifications): ஆல்-ரவுண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP66 + IP68 மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டைவிட கூடுதல் டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. அடுத்ததாக பேட்டரி சிஸ்டம் பெரிதும் பேசப்படுகிறது. ஏனென்றால், 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொடுக்கிறது.

பின்றானே இவன்.. ரூ.15,540 பட்ஜெட்ல 50MP கேமரா.. 6500mAh பேட்டரி மாடல்!

இந்த பட்ஜெட் மாடல்களில் 6500mAh பேட்டரி கிடைப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓப்போ ஏ5 போனில் ஏஐ எஜுகேஷன் அசிஸ்டன்ட் (AI Education Assistant), ப்ளூயிட் கிளவுட் (Fluid Cloud), ஃபேமிலி புரொடெக்சன் (Family Protection), ஹாண்டர் ஆண்டெனா ஆர்க்கிடெக்ச்சர் (Hunter Antenna Architecture) போன்ற பிரத்யேக பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ5 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.07 கலர் டெப்த் கிடைக்கிறது. அண்டர் வாட்டர் கேமரா மோட் (Underwater Camera Mode), அல்ட்ரா கிளியர் நைட் சீன் (Ultra Clear Night Scene) போன்ற பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ ரேடியன்ஸ் பியூட்டி (AI Radiance Beauty) பீச்சர் உள்ளது.

மேலும், ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) மூலம் ஏஐ எலிமினேஷன் (AI Elimination), ஏஐ ஆன்டி-ஸ்மியர் (AI Anti-smear), ஏஐ டீ-கிளார் (AI De-glare) மற்றும் ஏஐ அல்ட்ரா எச்டி பிக்சல் (AI Ultra HD Pixel) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. சிர்கான் பிளாக் (Zircon Black), டயமண்ட் பிங்க் (Diamond Pink) மற்றும் மைக்கா ப்ளூ (Mica Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.15,540ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.17,935ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.21,530ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.23,925ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. மார்ச் 21ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A5 With 50MP Camera 12GB RAM Launched China Sale From March 21 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X