தலைவரு மிரட்டிட்டாப்ல.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டுடன் ஓப்போ பிரியர்களுக்கு அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெடியாகிவிட்டது. ஓப்போ ஏ5 ப்ரோ (OPPO A5 Pro) சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ஓப்போ ஏ5 ப்ரோ போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நியூ இயர் ரெட் (New Year Red), ராக் பிளாக் (Rock Black), குவார்ட்ஸ் ஒயிட் (Quartz White), சாண்ட்ஸ்டோன் பர்பிள் (Sandstone Purple) ஆகிய கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. 360 டிகிரி வாட்டர் டிராப் ரெசிஸ்டன்ட், லோவ் டெப்ம்ரேச்சர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. IP69 ரெசிஸ்டன்ட், IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP66 ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக வெளியாகி இருக்கிறது.

ஓப்போ ஏ5 ப்ரோ அம்சங்கள் (OPPO A5 Pro Specifications): இந்த ஓப்போவில் கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (4nm Octa Core MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் கிடைக்கிறது. பக்கா அவுட்புட் கொண்ட மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது.
இந்த ஓப்போ ஏ5 போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்களில் மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கொடுக்கப்படவில்லை.
ஆட்டோ போகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. குவாட் லென்ஸ் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 80W சூப்பர்வூக் சார்ஜிங், 6000mAh பேட்டரி வருகிறது.
மேலும், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்இடிஇ (Dual 4G VoLTE), வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ5 போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,330ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,670ஆக இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,170ஆக இருக்கிறது. சீனாவில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. டிசம்பர் 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த தேதிக்கு பிறகு மற்ற மார்கெட்டில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








