யாரு விடுவா? 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. அறிமுகமானது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ5 ப்ரோ (OPPO A5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், 512ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒப்போ வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ ஏ5 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ5 ப்ரோ அம்சங்கள் (OPPO A5 Pro Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ஏ5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 2412×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) 4என்எம் சிப்செட் உடன் இந்த ஒப்போ ஏ5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஏ5 ப்ரோ போன். எனேவ இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
ColorOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ஏ5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன்.
IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ5 ப்ரோ போன். பின்பு மிலிட்டரி கிரேட் உறுதியுடன் (miltary-grade durability) இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்போ போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது ஒப்போ ஏ5 ப்ரோ.
6000mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸமார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5 802.11 ஏசி, ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ், க்ளோனஸ், பெய்டோ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ ஏ5 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.
ஆனால் ஒப்போ ஏ5 ப்ரோ போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒப்போ ஏ5 ப்ரோ போனின் ஆரம்ப விலை 1999 yuan ரூ.23,330-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








