Home
Mobile

அடிச்சான் பாரு ஓப்போ.. வெறும் ரூ.16,499 போதும்.. 5800mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50M கேமரா.. எந்த மாடல்?

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் டிஸ்பிளே, IP69 ரேட்டிங் ஆல்-ரவுண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட், 360 டிகிரி ஆர்மர் பாடி போன்ற ரக்கட் டிசைன் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 5800mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஏ5 ப்ரோ 5ஜி (OPPO A5 Pro 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றம் அறிமுக சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் பட்ஜெட்டிலும் அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ஓப்போ வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், வழக்கமாக கிடைக்கும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகராக IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, 80 டிகிரி ஹாட் வாட்டர் ஸ்பிளாஷஸ், 1.5 மீட்டர்கள் ஆழம், 30 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்கும்.

அடிச்சான் பாரு ஓப்போ.. வெறும் ரூ.16,499 போதும்.. 5800mAh பேட்டரி!

இதுபோக டேமேஜ் ப்ரூப் 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. 14 மிலிட்டரி கிரேடு டெஸ்ட்களை பாஸ் செய்துள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மற்ற போன்களைவிட இது கூடுதல் டியூரபிலிட்டி மற்றும் ரக்கர் பாடி கொடுக்கிறது. இதற்கு ஏற்ப டிஸ்பிளேவுக்கும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ ஏ5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A5 Pro 5G Specifications): இந்த ஏ5 சீரிஸ் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கிடைக்கிறது.

6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கேமராவில் பிரீமியம் சென்சார்களை எதிர்பார்க்க முடியவில்லை. 50 எம்பி மெயின் + 2 எம்பி மோனோகுரோம் கிடைக்கிறது.

அடிச்சான் பாரு ஓப்போ.. வெறும் ரூ.16,499 போதும்.. 5800mAh பேட்டரி!

அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் கிடையாது. 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங், லைவ்போட்டோ, ஏஐ எரைசர் மற்றும் ஏஐ அன்பிளர் போன்ற லேட்டஸ்ட் கேமரா பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஓப்போ ஏ5 ப்ரோ 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5800mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. இந்த ஓப்போ போனை ஃபெதர் ப்ளூ (Feather Blue) அல்லது மோச்சா பிரவுண் (Mocha Brown) கலர்களில் வாங்கலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வெர்ஷனின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வெர்ஷனின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ரூ.1,500 கேஷ்பேக் போக விற்பனைக்கு வந்துள்ளது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A5 Pro 5G With 50MP Camera 8GB RAM 5800mAh Battery Launched in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X