OPPO A5 Pro 5G: 2025 இல் வெளியான பெஸ்ட் ட்யூரபில் ஸ்மார்ட்போன்.. ஏன்?

நேர்மையாக சொல்லப்போனால், முதல் டிராப்பிலேயே உடையாத அல்லது லேசான மழைக்கு பிறகு டெட் ஆகாத உண்மையிலேயே நீடித்து உழைக்கும் ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது என்பது - இருக்க வேண்டியதை விட கடினமானதாக உள்ளது. பெரும்பாலான ரக்டு போன்கள் இராணுவ உபகரணங்களை போல தோற்றமளிக்கின்றன, அதே நேரத்தில் நேர்த்தியான ஸ்மார்ட்போன்கள் மென்மையான கண்ணாடி சிற்பங்களை போல உணர வைக்கின்றன, அவைகளை பல்க் ஆன கேஸ் இல்லாமல் பயன்படுத்த பயப்படுகிறோம். OPPO இந்தியா, ஸ்மார்ட்போன் துறையில் நீடித்து உழைக்கும் தன்மைக்கான புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது, அதை எப் சீரிஸிலிருந்து ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக விரிவுபடுத்துகிறது. இது நீடித்து உழைக்கும் சாம்பியன் குடும்பத்தை உருவாக்கும் OPPO வின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. அதனால்தான் OPPO A5 Pro 5G மிட்-ரேன்ஜ் பிரிவில் மிகவும் வியத்தகு முறையில் தனித்து நிற்கிறது - இது வடிவமைப்பு அல்லது அம்சங்களில் சமரசம் செய்யாத நீடித்து உழைக்கும் ஒரு சாம்பியன் ஆகும்.
OPPO வின் ஏ சீரிஸில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், மலிவு விலையில் கிடைக்கும் போன்கள் கடினமாக இருக்க முடியாது என்ற கட்டுக்கதையை உடைக்கிறது. இராணுவ தர அதிர்ச்சி எதிர்ப்பு, மூன்று மடங்கு நீர் மற்றும் தூசி பாதுகாப்பு மதிப்பீடுகள் (IP66, IP68, மற்றும் IP69) மற்றும் ஸ்டாண்டர்ட் ஸ்க்ரீன்களை விட 160% வலிமையான வலுவூட்டப்பட்ட கிளாஸ் ஆகியவற்றுடன், இது அன்றாட வாழ்க்கையின் குழப்பங்களை தக்கவைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய 5800mAh பேட்டரி, ஹண்டர் ஆண்டெனா கட்டமைப்பு மூலம் 200% நெட்வொர்க் சிக்னல் பூஸ்ட் மற்றும் வெறும் 194 கிராம் எடையில் நேர்த்தியான 7.76மிமீ ஃப்ரொபைல் ஆகியவற்றால் நிரம்பிய இந்த ஸ்மார்ட்போன் - சக்தியையும், எடுத்து செல்லக்கூடிய தன்மையையும் சமநிலைப்படுத்துகிறது. இந்த விலை வரம்பில் உள்ள ஸ்மார்ட்போன்கள் உருவாக்கத் தரத்தில் சிறிய மாற்றங்களை செய்தாலும், OPPO மற்ற ஸ்மார்ட்போன்கள் மிகவும் சாதாரணமாக தோல்வியடையும் சூழல்களில் செழித்து வளரும் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. நீங்கள் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் உறுதியான மிட்-ரேஞ்சராக இது ஏன் இருக்கலாம் என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்!

நீடித்து உழைக்கும் தன்மை - விட்டுக்கொடுக்காத டூயரபிலிட்டி: முதலில் - இந்த போன் உண்மையிலேயே கடினமானது. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் டூயரபிலிட்டி பற்றி அதிகம் குறிப்பிடவில்லை என்றாலும், ஒப்போ நிறுவனம் IP69, IP68 மற்றும் IP66 மதிப்பீடுகளுடன் இந்த ஸ்மார்ட்போனை முழுமைப்படுத்தி உள்ளது. 18 மல்டி-லிக்விட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை கொண்டு, இந்த ஸ்மார்ட்போன் வியர்வை, உப்பு நீர், காபி மற்றும் பல போன்ற அன்றாட லீக்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தவறுதலாக தண்ணீரில் போடலாம், இதோடு மழையில் சிக்கி கொள்ளலாம் அல்லது இதை கையில் வைத்துக்கொண்டு பெரிதும் கவனித்துக் கொள்ளாமல் கட்டுமான தளத்தில் வேலை செய்யலாம்!
OPPO A5 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது MIL-STD-810H இராணுவ-தர சான்றிதழை கொண்டுள்ளது - இது தீவிர வெப்பநிலை, மழை, தூசி, உப்பு மூடுபனி மற்றும் அதிர்ச்சிகள் உள்ளிட்ட 14 இராணுவ தர நிலைமைகளுக்கு எதிராக சோதிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இதை வேறுபடுத்துவது ஏஎம்04 விண்வெளி-தர அலுமினிய அலாய் பிரேம் ஆகும். இது விமானக் கூறுகளில் நீங்கள் காணக்கூடிய ஒரு பொருள் ஆகும். வலுவூட்டப்பட்ட டூயல்-டெம்பரிங் கிளாஸ் ஆனது இந்த ஸ்மார்ட்போனை ஸ்டாண்டர்ட் கிளாஸ் கொண்ட வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட 160% அதிக டிராப் -ரெசிஸ்டென்ட் தன்மையை கொண்டுள்ளது. உள்ளே, OPPO வின் ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங், விபத்துகள் நிகழும்போது உள் கூறுகளைப் பாதுகாக்க சிறிய ஷாக் அப்சார்ப்பர்ஸ் போல செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில் நாம் நமது ஸ்மார்ட்போன்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கு உண்மையில் அர்த்தமுள்ளதாக இருப்பது - அதன் டூயரபிலிட்டி ஆகும்!

சிக்னல் உங்களை விரும்பாவிட்டாலும் இணைந்திருங்கள்: சிக்னல் இல்லாமல் தவித்து நின்ற வெறுப்பூட்டும் தருணத்தை நாம் அனைவரும் ஒருமுறையாவது சந்தித்திருப்போம். குறிப்பாக, நீங்கள் ஒரு முக்கியமான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் போது தான், உங்கள் போனில் சிக்னல் இல்லாமல் மறைந்து போகும். OPPO A5 Pro 5G இதை AI LinkBoost 2.0 உடன் சமாளிக்கிறது. இதை நாங்கள் வெறும் மார்க்கெட்டிங் பேச்சிற்காக சொல்லவில்லை என்பதை குறிப்பிட்டு கூறிக்கொள்கிறோம். இந்த போனில் உள்ள ஸ்மார்ட் அல்காரிதம் 360° சரவுண்ட் ஆண்டெனா அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது பலவீனமான சிக்னல் பகுதிகள் மற்றும் சிக்னலே இல்லதாக டெட் நெட்வொர்க் மண்டலங்களில் கூட இணைப்பை மேம்படுத்துகிறது.
மைக்ரோ-ஸ்லிட் ஆண்டெனா வடிவமைப்பு மற்றும் 4x4 MIMO (B40, B3, B39) உடன், பயனர்கள் 200% சிறந்த சிக்னல், 84.2% ஆண்டெனா கவரேஜ் மற்றும் 30% லோ-லேடன்சி அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது உண்மையிலேயே அருமையான ஒன்று: BeaconLink உதவியுடன் ஒன் ஆன் ஒன் புளூடூத் குரல் அழைப்புகளைச் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. குறிப்பாக, 205 மீட்டர் இடைவெளியில் பூஜ்ஜிய நெட்வொர்க் கவரேஜ் இருந்தாலும் கூட இது சிறப்பாக செயல்படுகிறது. அதேபோல் கிராமப்புற மற்றும் குறைந்த நெட்வொர்க் இடங்களில் உள்ள பயனர்களுக்கும் கூட இது ஒப்பிடமுடியாத பயன்பாட்டை வழங்குகிறது. ட்ரெக்கிங், கேம்பிங், ஹைகிங் மற்றும் உங்கள் அலுவலக கட்டிடத்தின் ஒரு மூலையில் சிக்னல் இல்லாமல் போனால், இனி கவலைப்பட தேவையில்லை. இந்த போனில் உள்ள அம்சம், உங்கள் ரியல் டைம் சிக்னல் பிரச்சினைக்கு ஒரு நடைமுறை தீர்வாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

எடையை விட சிறந்த செயல்திறன்: மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 12GB வரை ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ்ஜால் OPPO A5 Pro 5G இயங்குகிறது. இது மல்டி டாஸ்கிங், கேமிங் மற்றும் போனின் உற்பத்தித்திறனை எளிதாகக் கையாளுகிறது. OPPO வழங்கும் டிரினிட்டி எஞ்சின் கலர் ஓஎஸ் 15 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நிலையான மென்மையான செயல்திறனை உறுதி செய்கிறது. OPPO-வின் 48 மாத ஃப்ளூயன்சி பாதுகாப்பு சான்றிதழால் சரிபார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனமான பயன்பாடுகளுக்கு இடையில் ஸ்விட்சிங் செய்யும் பொழுது, மீடியாவை எடிட் செய்யும் பொழுது, அல்லது சோசியல் மற்றும் வொர்க் டூல்ஸ் கருவிகளைப் பயன்படுத்தும் போதும், மல்டி டாஸ்கிங் செய்யதால் கூட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக செயல்பட்டு, ஹெவி பயன்பாட்டை சிறப்பாக செய்து முடிக்கும் படியான திறனை கொண்டுள்ளது. கேமிங் ஆர்வலர்களுக்கு, AI GameBoost அம்சம் பிரேம் வீதங்களை நிலைப்படுத்துவதன் மூலம் தாமதமில்லாத செயல்திறனை வழங்குகிறது. இதற்கிடையில், வெப்ப ஜெல் கொண்ட 1,100 மிமீ² விசி கூலிங் சிஸ்டம் நீட்டிக்கப்பட்ட விளையாட்டின் போது வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அனுமதிக்கிறது.
OPPO A5 Pro 5G ஸ்மார்ட்போன் சாதனம் பப்ஜி, MLBB மற்றும் ஃப்ரீ ஃபையர் போன்ற கேம்களில் 8+ மணிநேர தொடர்ச்சியான கேமிங் பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் சீரியஸ் கேமர்களுக்கு நம்பகமான தேர்வாக அமைகிறது. அல்ட்ரா வால்யூம் பயன்முறையால் மேம்படுத்தப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கு ஆடியோ அம்சம் கூட நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இது ஒலி வெளியீட்டை 300% வரை அதிகரிக்கிறது. இந்த சாதனம் சத்தமில்லாத சூழல்களில் கூட வாய்ஸ் கால், மியூசிக் மற்றும் கேமிங் சவுண்ட்களை சத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

நேர்த்தியான வடிவமைப்புடன் நீடித்த தோற்றம்: இந்த போனின் கரடுமுரடான உள் அமைப்பு இருந்தபோதிலும், OPPO A5 Pro 5G ஒரு நேர்த்தியான 7.76 மிமீ சுயவிவரத்தை பராமரிக்கிறது. இது வெறும் 194 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. இது இரண்டு நேர்த்தியான பூச்சுகளில் வருகிறது: மென்மையான மேட் அமைப்புடன் மோச்சா பிரவுன் மற்றும் இறகு வடிவங்களைப் பிரதிபலிக்கும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் க்ளோ பூச்சுடன் ஃபெதர் ப்ளூ நிறங்களில் வருகிறது. உண்மையில் இந்த இரண்டு நிறங்களும் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் ஸ்பிளாஸ் டச் ஈரமான அல்லது எண்ணெய் கைகளில் கூட திரையைச் சிரமமின்றி பயன்படுத்த அனுமதிக்கிறது. குறிப்பாக எந்த இடங்களிலும் இந்த போனின் டிஸ்பிளேவை அருமையாகப் பயன்படுத்தலாம்.

நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்: இந்த போனின் 5800mAh பேட்டரியைப் பற்றி பேசுகையில், 16.1 மணிநேரம் யூடியூப் வீடியோ பிளேபேக், 35.7 மணிநேர டாக்டைம், 31.3 மியூசிக் ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனின் பேட்டரி வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
குறிப்பாக இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 45W SUPERVOOCTM ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியனது 5 நிமிடங்களுக்கு நிமிடங்களுக்குள் 0 முதல் 5 சதவீதம் சார்ஜ் செய்யும். அதேபோல் 83 நிமிடங்களில் இந்த 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 1,600 முழு சார்ஜிங் சுழற்சிகளுக்குப் பிறகு, பேட்டரி அதன் அசல் திறனில் 80 சதவீதம் வரை தக்கவைத்துக்கொள்ளும். பேட்டரி கவலைக்கு குட்பை சொல்லுங்கள் மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மைக்கு இந்த போனை வாங்குவது நல்லது.

வெறுமனே போட்டோக்களை தாண்டிய விஷயங்களை கேப்சர் செய்யும் கேமரா: பல்வேறு மக்கள் கேமரா குவாலிட்டி பொறுத்தே ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்கின்றனர். அதாவது போனின் கேமரா தான் நம் வாழ்க்கையில் முக்கிய நேரங்களில் அழகான படங்களைப் பிடிக்க உதவுகிறது. அதன்படி இந்த OPPO A5 Pro 5G போனும் அசத்தலான கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். அதேபோல் AI அம்சங்கள், AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரெனோ13 சீரிஸில் முதன்முதலில் காணப்பட்ட அண்டர்வாட்டர் போட்டோகிராபி மோட் ஏ சீரிஸில் அறிமுகமாகிறது, யூசர்கள் நீருக்கடியில் ஷார்ப், வைப்ரன்ட் ஸ்ஷாட்ஸ்களை கேப்ச்சர் செய்ய இது உதவுகிறது. ஏஐ எரைசர் 2.0, ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ்சர் மற்றும் ஏஐ ரெப்ளெக்சன் ரிமூவர் மூலம் போஸ்ட்- எடிட்டிங்கை எளிதாக்குகிறது, இது ஒவ்வொரு முறையும் ஸ்டன்னிங் ரிசல்ட்களை எளிதாக்கும்படி, ஒன்-டேப்பில் ரீஃபைண்ட்மெண்ட்களை செயல்படுத்துகிறது.
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஏற்ப, டூயல்-வியூ வீடியோ ஆனது ஃப்ரன்ட் மற்றும் ரியர் கேமராக்களிலிருந்து ஒரே நேரத்தில் படமெடுக்க இது அனுமதிக்கிறது, இது விலாக்குகள் மற்றும் ரியாக்ஷன் ரீல்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இது ப்ரோபஸ்னல்களுக்கு மட்டுமல்லாமல் அன்றாட யூசர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு கேமரா செட்டப்பாகும்
கலர்ஓஎஸ் 15 - மென்மையின் பின்னால் உள்ள சீக்ரெட் சாஸ்: கலர்ஓஎஸ்15-இல் இயங்கும் OPPO A5 Pro 5G ஆனது தந்திரங்களுக்கு பதிலாக ஸ்மார்ட், பிராக்டிக்கல் டூல்களை முன்னணியில் கொண்டுவருகிறது. பேக்கிரவுண்ட்டில் பல ஆப்கள் இயங்கினாலும், டிரினிட்டி எஞ்சின் ஆனது போனை ஃபாஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது. ஏஐ ஸ்டுடியோ ஆனது ஒரு ஃபன் மற்றும் கிரியேட்டிவ் லேயரை சேர்க்கிறது, யூசர்கள் போட்டோக்களை எடிட் செய்யவும்,, ஜிப்களை ஜெனரேட் செய்யவும், செல்லப்பிராணிகளின் பிக்சர்களை அனிமேஷன் வால்பேப்பர்களாக மாற்றவும் அனுமதிக்கிறது. மாணவர்கள் மற்றும் வொக்கிங் ப்ரோபஸ்னல்களுக்கு, நோட்ஸ்கள் மற்றும் டாக்குமெண்ட்களுக்கான ஏஐ அசிஸ்டண்ட் ஆனது உண்மையான கேம்-சேஞ்சராக இருக்கிறது. இதனால் ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டிலும் டெக்ஸ்ட்டை சம்மரைஸ், ரீரைட் மற்றும் மொழிபெயர்க்க முடிகிறது. இதனால் ப்ரோடக்டிவிட்டி ஆனது முன்னெப்போதையும் விட எளிதாகிறது. ஏஐ அன்பிளர் மற்றும் ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் போன்ற பீச்சர்கள் ஒரே டேப்பில் இம்பர்ஃபெக்ட் போட்டோக்களை மீட்டெடுக்க உதவுகின்றன, இந்த ஏஐ டூல்கள் வெறும் ஃபிளாசி ஆட்-ஆன்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. அவை அன்றாட வாழ்வில் உண்மையிலேயே உதவியாக இருக்கும்.
அவுட்டோர் மோட்: ஏனென்றால் அனைத்து போன்களும் நிஜ உலகில் வேலை செய்யாது! உண்மையிலேயே தனித்து நிற்கும் ஒரு பீச்சர் அவுட்டோர் மோட் ஆகும் - ஏனெனில் ஓப்போவில் இருக்கும் ஒருவர் இதை உணர்ந்திருக்கலாம். எல்லோரும் தங்களது போனை காலநிலை கட்டுப்பாட்டு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப் போவதில்லை. இது முக்கியமான ஆப்களுக்கான பர்ஃபாமென்ஸை அதிகரிக்கிறது, சிக்னல் வரவேற்பை மேம்படுத்துகிறது, ஸ்கிரீன்-ஆன் டைமை நீட்டிக்கிறது, மேலும் குளோவ்ஸ்களுடன் கூட வேலை செய்கிறது.
குளிர்காலத்தில் உறைந்த விரல்களால் டைபிங் செய்ய முயற்சித்த அல்லது பிரைட் சன்லைட்டில் மங்கலான ஸ்கிரீனை பார்க்கும் ஒருவரை போல, இந்த வகையான பிராக்டிகல் திங்கிங்ஸ் ஆனது ஒருபோதும் பயன்படுத்தாத ஒரு கேமரா லென்ஸை விட முக்கியமானது.

முடிவுரை: ரூ.17,999 விலையில் தொடங்கும் இது இந்த பிரிவில் செக்மெண்ட் லீடராகும். OPPO A5 Pro 5G ஆனது வெறும் ஸ்பெக்ஸ் மற்றும் விலையில் போட்டியிடவில்லை - இது உண்மையில் மக்கள் தங்கள் போன்களை நிஜ வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சரியான நீடித்து உழைக்கும் துணை தேவைப்படுபவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பட்ஜெட் குறைவாக உள்ள மாணவராக இருந்தாலும் சரி, நேரத்தை வீணடிக்க முடியாத ப்ரோபஸ்னலாக இருந்தாலும் சரி, அல்லது டிராமா இல்லாமல் நம்பகத்தன்மையுடன் தன்னுடை வேலையை செய்யும் போனை விரும்பும் ஒருவராக இருந்தாலும் சரி, இந்த டிவைஸ் உங்களுக்கு உதவ இருக்கிறது.
இதன் சிந்தனைமிக்க மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் முதல் டிரிபிள் ஐபி ரேட்டிங் டியூரபிலிட்டி, பிராக்டிகல் பேட்டரி ஆயுள் வரையில், கேமிங் பர்ஃபாமென்ஸ் முதல் தடையாக இருப்பதற்கு பதிலாக உண்மையில் உதவும்வகையில் இருக்கும் ஏஐ பீச்சர்கள் வரையில் - A5 Pro 5G ஆனது அதன் விலையை விட அதிகமாக உங்களுக்கு வழங்குகிறது. இது ஒவ்வொரு பீச்சரையும் கொண்டிருப்பது பற்றியது அல்ல; இது சரியானவற்றை கொண்டிருப்பது பற்றியதாகும்.

விலை, அவைலபிலிட்டி மற்றும் ஆஃபர்கள்: OPPO A5 Pro 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமேசான், பிளிப்கார்ட், இ-ஓப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெயில் ஸ்டோர்களில் மோச்சா பிரவுன் மற்றும் ஃபெதர் ப்ளூவில் கிடைக்கின்றன . எஸ்பிஐ, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பிஓபி பைனான்சியல், ஃபெடரல் பேங்க் மற்றும் டிபிஎஸ் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்கள் ரூ.1500 வரை கேஷ்பேக் மற்றும் 6 மாதங்கள் வரை நோ-காஸ்ட் ஈஎம்ஐ அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








