அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. IP69 ரேட்டிங்.. ஏப்.24-ல் இந்தியாவுக்கு வரும் OPPO 5ஜி போன்! எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் தனது ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி (OPPO A5 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. 5800எம்ஏஏச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபி69 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A5 Pro 5G specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோக்ரோம் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5800mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் குறைந்த எடையில் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒப்போ ஏ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications