முரட்டு போன்.. ரூ.17414 போதும்.. 5800mA பேட்டரி.. IP66, IP68+IP69 ரெசிஸ்டன்ட்.. மிலிட்டரி கிரேடு.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்கள் எப்போது இங்கு வெளியாகும் என்று காத்திருக்கும்படி அடிமட்ட பட்ஜெட்டில் IP66, IP68 மற்றும் IP69 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ், 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5800mA பேட்டரி மற்றும் 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஏ5 ப்ரோ 4ஜி (OPPO A5 Pro 4G) மலேசிய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த ஓப்போ போனில் அப்படி என்ன இருக்கிறது? விவரம் இதோ.
ஓப்போ ஏ5 ப்ரோ 4ஜி அம்சங்கள் (OPPO A5 Pro 4G Specifications): இந்த ஓப்போவில் 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த ஓப்போவில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் IP66, IP68 மற்றும் IP69 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. இதுபோக மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military-Grade Shock Resistance) பேக் செய்கிறது.
ஆகவே, ஹாட் வாட்டர் ஸ்பிளாஷெஸ் ரெசிஸ்டன்ட், 1.5 மீட்டர்கள் டெப்த் ரெசிஸ்டன்ட், ட்ராப் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக டிஸ்பிளேவில் குளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கிடைக்கிறது. இவ்வளவு ரெசிஸ்டன்ட் இருந்தும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Dual Stereo Speakers) இந்த ஓப்போ போன் கொடுக்கிறது.
லேட்டஸ்ட் ஓப்போ மாடல்களில் கிடைக்கும் ஏஐ லிங்பூஸ்ட் (AI LinkBoost), ஏஐ கேம்பூஸ்ட் (AI GameBoost), ஏஐ அசிஸ்டன்ட் (AI Assistant) மற்றும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) போன்ற பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610) கிடைக்கிறது.
இந்த ஓப்போ ஏ5 ப்ரோ 4ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 1 4ஜி (Qualcomm Snapdragon 6s Gen 1 4G) சிப்செட் கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5800mA பேட்டரி கிடைக்கிறது. விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. இந்த ஓப்போவில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் கலர்ஓஎஸ் 15.0 மூலம் ஏஐ போர்ட்ராய்டு ரீடச் (AI Portrait Retouch), லைவ் போட்டோ (Livephoto), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover), ஏஐ அன்பிளர் (AI Unblur) மற்றும் ஏஐ ஸ்டூடியோ (AI Studio) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உள்ளது.
இந்த ஓப்போவில் மோச்சா பிரவுன் (Mocha Brown) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,414ஆக இருக்கிறது. இப்போது மலேசிய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








