Home
Mobile

சம்பவம் இருக்கு.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ5 5ஜி (Oppo A5 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ ஏ5 5ஜி அம்சங்கள் (Oppo A5 5G Specifications): பஞ்ச்-ஹோல் (punch-hole) வடிவமைப்பு கொண்ட 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சம்பவம் இருக்கு.. இந்தியாவுக்கு வரும் புது Oppo 5ஜி போன்! எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த அசத்தலான ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15.0 (ColorOS 15.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.15,499 பட்ஜெட்டில் ஒப்போ ஏ5 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A5 5G to launch in India soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X