Home
Mobile

ஆளுக்கு 1 வாங்குவீங்க.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் போன்களை அறிமுகம் செய்கிற ஒப்போ. எனவே தான் இந்தியாவில் ஒப்போ போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ5 5ஜி (Oppo A5 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.13999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ ஏ5 5ஜி அம்சங்கள் (Oppo A5 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன்.

அதுவும் 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15.0 (ColorOS 15.0) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் (Military-grade durability certification) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

அதேபோல் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. அரோரா கிரீன் (Aurora Green), மிஸ்ட் ஒயிட் (Mist White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
OPPO A5 5G phone available at 20 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X