தெறிக்கவிட்ட Oppo.. 6000mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ5 5ஜி (Oppo A5 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000mAh பேட்டரி, மிலிட்டரி-கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) சப்போர்ட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ஏ5 5ஜி அம்சங்கள் (Oppo A5 5G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15.0 (ColorOS 15.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் (Military-grade durability certification) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.
IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. பின்பு இந்த போனின் எடை 194 கிராம் ஆகும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. அரோரா கிரீன் (Aurora Green), மிஸ்ட் ஒயிட் (Mist White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 5ஜி போனின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








