Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. 6000mAh பேட்டரி.. IP65 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஒப்போ ஏ5 5ஜி அம்சங்கள் (Oppo A5 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன்.

அதேபோல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15.0 (ColorOS 15.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் (Military-grade durability certification) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

அதுவும் ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ5 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. ஒப்போ ஏ5 5ஜி போனின் எடை 194 கிராம் ஆகும்.

அரோரா கிரீன் (Aurora Green), மிஸ்ட் ஒயிட் (Mist White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A5 5G available at a discounted price on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X