ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் வலைதளத்தில் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,990-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.11,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே
ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமராக்கள்
ஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications