6ஜிபி ரேம் வசதியுடன் ஒப்போ ஏ5 2020 அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரூ.14,9990-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.
ஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications