Home
Mobile

வெறும் ரூ.12,499 போதும்.. 45W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. அறிமுகமானது புது Oppo போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ3எக்ஸ் (Oppo A3X) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 5100எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ஏ3எக்ஸ் அம்சங்கள் (Oppo A3X Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால்,பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வெறும் ரூ.12,499 போதும்..அறிமுகமானது புது Oppo போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இராணுவ தர MIL-STD 810Hசோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

வெறும் ரூ.12,499 போதும்..அறிமுகமானது புது Oppo போன்.. எந்த மாடல்?

5100mAh பேட்டரி வசதியுடன் ஒப்போ ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டாரி பர்பிள் (Starry Purple), ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black), ஸ்டார்லைட் ஒயிட் (Starlight White)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ஏ3எக்ஸ் போனின் 64ஜிபி வேரியண்ட் ரூ.12,499 விலையிலும், 128ஜிபி வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் வாங்க கிடைக்கும். வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஒப்போ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A3X Launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X