பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.3,500 ரேட் கட்.. ரூ.9,999-க்கு OPPO 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங் மாடல்!
பிளிப்கார்ட் விற்பனையில் அடிமட்ட விலைக்கு 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, IP54 ரேட்டிங், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன், பாண்டா கிளாஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G) போன் கிடைக்கிறது. ரூ.3,500 விலை குறைப்பில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (OPPO A3x 5G Flipkart Sale): இந்த ஓப்போ போன் அறிமுகம் செய்யப்பட்ட போது, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.9,999 விலைக்கு கிடைக்கிறது.

இந்த பட்ஜெட் நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. ஆகவே, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்ய வேண்டியது கிடையாது. இதன் மூலம் ரூ.3,500 விலை கம்மியாக ஆர்டர் செய்ய முடிகிறது. அதேபோல 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டானது, இப்போது ரூ.8,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, இதற்கும் ரூ.3,500 விலை குறைப்பு கிடைக்கிறது.
ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகிய போன்களுக்கு ரூ.3,000-க்கு மேல் விலை குறைப்பு கிடைப்பது, நல்ல லாபத்தை கொடுக்கக்கூடியது. இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி போனில் MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆகவே, மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் எதிர்பார்க்கலாம். அதேபோல, இந்த பட்ஜெட்டிலும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.
அதேபோல டிஸ்பிளேவுக்கும் பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடக்சன் கொடுக்கிறது. ஆகவே, குவாலிட்டி பக்காவாக இருக்கும். மேலும், ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black), ஸ்டார்லைட் ஒயிட் (Starlight White) மற்றும் ஸ்டார்ரி பர்பிள் (Starry Purple) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): இந்த ஓப்போ போனுக்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர் ஓஎஸ் 14 (Color OS 14) கிடைக்கிறது. இதுவொரு 5ஜி வேரியண்ட்டாக இருப்பதால், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மீடியமாக கிடைக்கும்.
4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல பாண்டா கிளாஸ் புரொடெக்சனுடன் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
மேலும், பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் + 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு ஓகேவான பீச்சர்களையே கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications