ஆபரில் OPPO 5ஜி போன்.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. டைமன்சிட்டி சிப்செட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. 5100எம்ஏஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G) ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ரூ.9999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது இந்த டைமன்சிட்டி சிப்செட். எனவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military-grade Durability) ஆதரவுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ மாடல்.
தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating) கொண்டுள்ளது இந்த ஓப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஓப்போ டிரினிட்டி என்ஜின் (OPPO Trinity Engine) மற்றும் மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

அதுவும் 5100mAh பேட்டரி உடன் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி போர்ட், போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








