பட்ஜெட் விலை.. 5100mAh பேட்டரி .. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் அடுத்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி (OPPO A3x 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது இந்த போன் வுநுேயுயு சான்றிதழில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A3x 5G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ஸ்டார்லைட் ஒயிட், டார்க் நைட் பர்பிள் மற்றும் கிளவுட் ஃபெதர் பிங்க் நிறங்களில் இந்த ஒப்போ போன் வெளிவரும்.
32எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி போன். எனவே இதன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.
அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி போன். பின்பு 5100 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி போன். குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இனி பட்ஜெட் விலையில் ஒப்போ போன்கள் வெளிவரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








