அதிருது இந்திய மார்க்கெட்.. ரூ.8,999 பட்ஜெட்ல 45W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. புது ஒப்போ போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி (Oppo A3X 4G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் மலிவு விலையில் 45W சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட பாடி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி அம்சங்கள் (Oppo A3X 4G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், பாண்டா கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection), 1604 x 720 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென்1 (Octa-Core Qualcomm Snapdragon 6s 4G Gen1) சிப்செட் உடன் இந்த ஒப்போ வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனுக்கு MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். கடுமையான வெப்பம், ஈரப்பதம் மற்றும் பல கடுமையான சூழல்கள் மற்றும் நிலைமைகளில் கடுமையாக இந்த போன் சோதிக்கப்பட்டது.
IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மேலும் கலர்ஒஎஸ் 14 (Color OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது புதிய ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி போன். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, குளோனாஸ் (GLONASS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

5100mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC)ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெபுலா ரெட் (Nebula Red), ஓஷன் ப்ளூ (Ocean Blue) நிறங்களில் இந்த புதிய ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.9,999-ஆக உள்ளது. வரும் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








