4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதற்குமுன்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது ஒப்போ ஏ3எஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ3எஸ்:
ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதா மற்றும் சிவப்பு நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஆக்டோ-கோர்:
ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications