Home
Mobile

பட்ஜெட் பிரீமியம்.. ரூ.10,000க்கு 50MP கேமரா.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.15,000 மதிப்புள்ள போன்களில் கொடுக்கப்படும் 50 எம்பி கேமரா, எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 33W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற பக்காவான அம்சங்களுடன் வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் ஓப்போ ஏ38 (Oppo A38) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பட்ஜெட் விலை போன்களுக்கான வரவேற்பு மிகப்பெரும் அளவில் இருக்கிறது. இதனால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பட்ஜெட் கொண்ட போன்களை போட்டிப் போட்டுக்கொண்டு அறிமுகம் செய்துவருகின்றன.

ரூ.10,000க்கு 50MP கேமரா.. 8GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அதில் சில நிறுவனங்கள் தங்களது கம்மி விலை போன்களை, முதலில் வெளிநாடுகளில் களமிறக்கி அதன் விற்பனையை சுதாரித்துக்கொண்டு, அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்துவருகின்றன. அந்த வரிசையில், இந்த மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கும், ஓப்போ ஏ38 போனானது, மலோசியன் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ ஏ 38 போனின் அம்சங்களை இப்போது தெரிந்துகொள்வோம். இந்த போனில் 6.56 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் வருகிறது. இந்த போன் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்சச்சுவல் ரேம் கொண்டுள்ளது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இதுவொரு பட்ஜெட் போன் என்பதால், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதில் போர்ட்ராய்டு போகே (Portrait Bokeh) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) போன்ற ஓப்போவின் பிரத்யேக கேமரா அம்சங்கள் வருகின்றன.

5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட், சைடு பேஸிங் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது. மேலும், ப்ளூடூத் 5.3, வை-பை 5, என்ஃஎப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன.

இந்த போன் பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 4 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,652ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே விலையில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஓரிரு வாரங்களில் இங்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. மிகவும் கம்மியான விலையில், பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற நல்ல அம்சங்கள் கொண்ட போன் வேண்டுமானால், இந்த ஓப்போ ஏ38 மாடலை வாங்க திட்டமிடலாம்.

Best Mobiles in India

English summary
Oppo A38 with 8GB RAM, Helio G85, 5,000mAh Battery Launched Check Price Specification Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X