Home
Mobile

தாறுமாறான போன்.. கம்மி பட்ஜெட்ல.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

கம்மி பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் டிசைன் மற்றும் 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி ஏஐ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற வியக்க வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ ஏ38 (Oppo A38) போன் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஓப்போ ஏ 38 அம்சங்கள் (Oppo A38 Specification): இந்த ஓப்போ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

கம்மி பட்ஜெட்ல.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த போனில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ மாடலில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்சச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ ஏ 38 போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. அந்த வகையில், 50 எம்பி ஏஐ மெயின் கேமரா (AI Main Camera) + 2 எம்பி டெப்த் கேமரா (Depth Camera) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு போக்கே (Portrait Bokeh) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) சப்போர்ட் வருகிறது.

அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IPX5 தர டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஓப்போ போனில் 33W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், போனில் சைடு பேஸிங் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack) வருகிறது. அதோடு ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 5 (Wi-Fi 5), என்ஃஎப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஓப்போ ஏ38 போன் குளோவ் பேக் பேனல் டிசைனில் பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அரபு அமீரகத்தில் (UAE) இன்று (செப்டம்பர் 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த வாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்த போனின் 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,000 பட்ஜெட்டிலும் 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,000 பட்ஜெட்டிலும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மலிவான விலையில், நல்ல கேமரா, பேட்டரி பேக்கப், சிப்செட் கொண்ட போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A38 with 50MP Camera, Helio G85 Launch in India On September Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X