Home
Mobile

யாரு சாமி அவன்.. கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ஏ38 (Oppo A38) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இந்திய மார்கெட்டில் மலிவு விலை போன்களின் அறிமுகம் அதிகரித்து விட்டது. இதனால், எந்த போனில் சிறந்த அம்சங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து அந்த போனை வாங்குவதற்குள் தலையே சுற்றிவிடுகிறது. இருப்பினும், பேட்டரி, சிப்செட் மற்றும் கேமரா ஆகிய 3 மூன்றையும் வைத்து விலைக்கேற்ப அந்த போனை தேர்வு செய்துகொள்ள முடியும்.

கம்மி பட்ஜெட்டில் பிரீமியம்! 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அந்த வரிசையில் ரூ.14,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஓப்போ ஏ38 போன், நல்ல நல்ல அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் பின்னியெடுக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி, அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்து, ஸ்மார்ட்போன் பிரியர்களை குஷிப் படுத்தியிருக்கிறது.

ஓப்போ ஏ38 அம்சங்கள் (Oppo A38 Specification): இந்த ஓப்போ மாடல் 6.56 இன்ச் (1920 × 1080 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் 430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13 (ColorOS 13) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வர அதிக வாய்ப்புள்ளது.

இந்த ஓப்போ மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இதில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படலாம். அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த போனில் சைடு மவுண்டென்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-Mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டூயல் நானோ சிம் (Dual Nano-SIM), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack) வருகிறது. அதேபோல ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்ஃஎப்சி (NFC), வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஓப்போ ஏ38 போன் பிளாக் மற்றும் கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. ஆகவே, செப்டம்பர் முதல் வாரம் அல்லது 2ஆவது வாரத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் விலை ரூ.14,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மலிவான விலையில், நல்ல டிசைன் மற்றும் அம்சங்களை கொண்ட போன் வாங்க வேண்டும் என்றால், இந்த ஓப்போ ஏ38 போன் பக்காவான தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A38 With 50MP Camera, 5000mAh Battery, MediaTek Helio G80 Check Specification Price Launch Timeline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X