Home
Mobile

அதிருது மார்கெட்.. ரூ.11,699 போதும்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. பிரீமியம் லுக்.. எந்த மாடல்?

வெறும் ரூ.11,699 விலைக்கு 8 ஜிபி ரேம், எச்டி டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற வியக்க வைக்கும் அம்சங்களுடன் ஓப்போ ஏ38 (Oppo A38) போன் ப்ரீ-ஆர்டருக்கு வந்துள்ளது.

ஓப்போ ஏ38 அம்சங்கள் (Oppo A38 Specification): இந்த ஓப்போ போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.11,699 போதும்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அதோடு டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்சச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு போகே (Portrait Bokeh) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) அம்சங்கள் வருகின்றன.

அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ ஏ38 போனில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IPX4 தர ப்ளாஸ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side ஸounted Fingerprint Scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் டூயல் 4ஜி (Dual 4G) ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. டைப் -சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

இந்த போன் குளோவிங் பிளாக் (Black) மற்றும் குளோவிங் கோல்டு (Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ.காம் (Oppo.com) ஆகிய தளங்களில் விற்பனை வருகிறது. இப்போது, ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வரும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.1,300 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை ஃபெடரல் பேங்க் (Federal Bank), ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank), எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank), எஸ்பிஐ (SBI) போன்ற வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

அதோடு நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓப்போ ஏ38 போனை தள்ளுபடி போக ரூ.11,699க்கு வாங்கிக் கொள்ள முடியும். கம்மியான விலையில் பிரீமியம் டிசைன், பக்காவான கேமரா, நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போன் வாங்க நினைப்பவர்கள் இந்த போனை ஆப்சனில் எடுத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OPPO A38 With 50MP Camera, 5000mAh Battery Goes Sales From September 13 in India Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X