வாரி தூக்கும் பட்ஜெட்.. 5000mAh பேட்டரி.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் ஐரோப்பாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
டிப்ஸ்டர் முகுல் சர்மா இந்த ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்ற தெரிவித்துள்ளார். எனவே இந்த புதிய ஒப்போ போன் செப்டம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 560 nits brightness), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13 (ColorOS 13) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) சிப்செட் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
ஒப்போ ஏ38 மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இதில் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதோடு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. குறிப்பாக இந்த போனை குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனில் சைடு மவுண்டென்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-Mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது.
டூயல் நானோ சிம் (Dual Nano-SIM), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack) வருகிறது. அதேபோல ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்ஃஎப்சி (NFC), வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள்இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிரீமியம் டிசைன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ போன்.

பிளாக் மற்றும் கோல்டு கலர்களில் ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ரூ.14,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒப்போ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியச் சந்தையில் ஒப்போ ஏ38 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சியோமி, விவோ நிறுவனங்களுக்குப் போட்டியா அவ்வப்போது புதிய புதிய போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கிறது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இப்போது வரும் ஒப்போ போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டு வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








