அசத்தலான ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஹீலியோ பி35 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இட்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

4230 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்10 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தின் பின்புறம்கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.14,900-ஆகஉள்ளது.


Click it and Unblock the Notifications