Home
Mobile

இந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் அடுத்தவாரம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சிறந்த டிஸ்பிளே வசதி

சிறந்த டிஸ்பிளே வசதி

இந்த ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு(720x1,600) பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ஏ31(2020) சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

நிறங்கள்

நிறங்கள்

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மிஸ்டரி பிளாக் மற்றும் பேண்டஸி ஒயிட் வண்ணங்களில் வெளிவந்துள்ளது, கண்டிப்பாக இந்ந ஸ்மார்ட்போன் ஒரளவு இந்தியாவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனின் விலை IDR 25,99,000 (இந்திய மதிப்பில் ரூ.13,500). குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo A31 Tipped to Launch in India Next Week, Sale Offers Tipped : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X