Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் வீடியோ கேம் வசதிக்கு தகுந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவல் அடிப்படையில் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 637சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றி சரியாக தகவல் வெளிவரவில்லை, இருந்தபோதிலும் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என்றும், பின்பு வைஃபை,ஜிபிஎஸ், வோல்ட்இ,ä 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ31 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் மாடல் எண் CPH2015 என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A31 Spotted On FCC With Triple Rear Cameras, 4,000mAh Battery: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X