பட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா, சிறந்த மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த டிஸ்பிளே வசதி

சிறந்த டிஸ்பிளே வசதி

இந்த ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு(720x1,600) பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ஏ31(2020) சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

நிறங்கள்

நிறங்கள்

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் மிஸ்டரி பிளாக் மற்றும் பேண்டஸி ஒயிட் வண்ணங்களில் வெளிவந்துள்ளது, கண்டிப்பாக இந்ந ஸ்மார்ட்போன் ஒரளவு இந்தியாவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போனின் விலை IDR 25,99,000 (இந்திய மதிப்பில் ரூ.13,500). குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A31 (2020) With 4230mAh Battery, MediaTek Helio P35 Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X